சென்னை வாலிபரின் இரட்டை கின்னஸ் சாதனை

310
மாரத்தான் தொடர் ஐயர்னிங் செய்து ஏற்கனவே 100 மணி நேரத்தில் செய்திருந்த கின்னஸ் சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து புதிய சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா. இவர் சாதனை முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். இந்த சாதனையை 25ம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
5 நாள் முடிவில் 7 ஆயிரம்  துணிகளை தாண்டி ஐயர்னிங் செய்து கின்னஸ்சில் புதிய இரட்டை சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 5 நாள் சாதனை நிகழ்ச்சியில் கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு கோடி பேரிடம் கண் தான உறுதிமொழி எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் சார்பில் மாவட்ட தலைவர்கள் தியாகராஜா, முரளி இருவரும் செய்து வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் 14 கின்னஸ் சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டினர் செய்த சாதனையை இதுவரை இந்தியர் யாரும் முறியடித்தது இல்லை.
முதல் முறையாக சென்னையை சேர்ந்த வாலிபர் டேனியல் சூர்யா தமது முயற்சியால் ஆஸ்திரேலியர் 100 மணி நேரத்தில் செய்த சாதனையை இவர் 26 மணி நேரத்தில் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டு சாதனை நாயகன் டேனியல் சூர்யாவை வாழ்த்தினார்.
கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது ” நகைக்கடை போன்ற நிகழ்ச்சிகளுக்கு போவதை விட இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சிறந்தது என்று வந்தேன். 5 நாட்கள் தொடர் ந்து சாதனை செய்ய வேண்டும் என்ற வேகம், அதோடு கண் தானம் என்ற நல்ல காரணத்துக்காக இதனை செய்திருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்” என்றார்.

 

Previous articleமுன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு…!.. ஒரு கதாநாயகி நடிகைக்கு நேர்ந்த சோதனை!
Next article“பிரகாஷ் ராஜ் சாருக்கும், நிவின் பாலிக்கும் என்றுமே ஒற்று போகாது…” என்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்