8 தோட்டாக்கள்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

‘8 தோட்டாக்கள்’ என்னும் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த  திரைப்படமானாது,  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து கொண்டே போகிறது. ‘8 தோட்டாக்கள் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கூர்மையான திறன் படைத்த தொழிலநுட்ப கலைஞர்கள், வலுவான கதையம்சம் என பல சிறப்பம்சம்ங்கள் இந்த படத்தில் பொருந்தியுள்ளது தான் அந்த ஏதிர்பார்ப்புகளுக்கு  காரணம். ரசிகர்களின் வரவேற்பை நன்கு பெற்று வரும் 8 தோட்டாக்கள் படத்தின் முதல் போஸ்டரை இன்று மாலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை இணை தயாரிப்பு செய்கிறது ‘பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்’.  இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர். முற்றிலும் திறமை படைத்த  புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி (அவம், கிரகணம்).
‘போலீஸ் கதைகள் எனக்கும் எப்பவும் பிடித்தமான ஒன்று. அந்த வகை படங்களுக்கு  மட்டும் நம் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.  ‘8 தோட்டாக்கள் என்னும் இந்த படத்தின்  கூர்மையான தலைப்பே ரசிகர்களை கவர்ந்து இழுக்க, இந்த படமும் அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். துப்பாக்கியில் இருந்து சீறி பாயும் தோட்டா போல இந்த  8 தோட்டாக்கள் திரைப்படம் அமைய வேண்டும். படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…’ என்றார் விஜய் சேதுபதி.⁠⁠⁠⁠