‘ரெமோ’ – ‘சிரிக்காதே…’ – மியூசிக் வீடியோ

ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பான முறையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மியூசிக் வீடியோ தான் “சிரிக்காதே…”.
ஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும்  24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படைப்பை, நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இந்த  “சிரிக்காதே…” மியூசிக் வீடியோவை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த  ‘சிரிக்காதே…’ – மியூசிக் வீடியோவை,  ‘சோனி மியூசிக்’ நிறுவனம் தங்களின் யூடூப் சேனல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
இசை : இளைஞர்களின் மனம் கவர்ந்த அனிரூத்
பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்
பாடகர்கள்: அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ்
ஒளிப்பதிவாளர்: ஸ்வரூப் பிலிப்
புரொடக்சன் டிசைனர்: டி. முத்துராஜ்
படத்தொகுப்பாளர்: தனுஜ்
ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்
சிகை அலங்காரம்: ரேச்சல் பி சிங்
அலங்காரம்: பின்கி லோஹர், அம்பிகா (ஸ்டைல் ஸ்மித் குழு)
புகைப்படம்: மார்ட்டின் டான்ராஜ்
புரொடக்சன் நிர்வாகி: வீர ஷங்கர்
கிரியேட்டிவ் புரொட்யூசர்: துனே ஜான்
எக்சிகுடிவ் புரொட்யூசர்:  ரவி குமார்
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிரூத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா.
தமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்த சிரிக்காதே மியூசிக் வீடியோ  வெளியாக இருப்பது மேலும் சிறப்பு. தமிழில் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் இன்னொ கெங்கா பாடியிருக்கும் ஆங்கில பதிப்பை வெளியிட தயாராக இருக்கிறது ‘MTV’ நிறுவனம்.
‘ரெமோ’ படத்தின் ஆணிவேராக செயல்படும் ’24 ஏ எம்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா இந்த மியூசிக் வீடியோவை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.