ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் மாவீரன் கிட்டு படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வருகிறது .

189
இயக்குநர் சுசீந்திரனின் நேர்த்தியான திட்டமிடுதல் பணியைக் கண்ட  ஐஸ்வேர் வீ.சந்திரசாமி முழு ஒத்துழைப்பை வழங்கிட குறித்த காலத்திற்குள் கம்பீரமாக மாவீரன் கிட்டு உருவாகிவருகிறார்.
சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்த போது தயாரிப்பாளர் இந்தப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதும் கவிஞர் யுகபாரதியுடன் பேசிக் கொண்டிருந்த போது “உங்கள் ஏற்றுமதி தொழிலைப் போல மிக அழகான திட்டமிடுதலை ஒவ்வொரு நாளும் உருவாக்கி மொத்த குழுவினருக்கும் நீங்கள் தரும் ஆதரவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது என்றார். இதையே வேறு விதமாக இசையமைப்பாளர் சிற்பி தயாரிப்பாளரின் சமீப சென்னை பயணத்தின் போது சொன்னார். “நானும் தம்பி சந்திரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால் தம்பி உருவாக்கிய படக்குழுவினரைப் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
 குறிப்பாக தற்போது இளைஞர்களை அதிக அளவுக்குக் கவரும் இசையமைப்பாளராக உள்ளவர்களில் டி.இமானும் சிறந்தவர், இவரின் இசையில் அனைத்துப் பாடல்களும் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாக இருக்குமென்றார்.இப்படிபட்ட அருமையான கூட்டணி நல்லதொரு வெற்றி படைப்பை கொடுப்பார்கள் என்று கூறினார் .
Previous article‘ரெமோ’ – ‘சிரிக்காதே…’ – மியூசிக் வீடியோ
Next articleYeidhavan Movie Teaser