உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான “ பாகுபலி – 2 வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப் படுகிறது.
இந்திய இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள பாகுபலி – 2 படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ்,நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தமிழ் நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளவர் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.
அத்துடன் கே.புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் “ மடைதிறந்து “ என்ற பெயரில் தமிழிலும், 1945 என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகிறது.
பாகுபலி – 2 – மடைதிறந்து – 1945 என்று பிக பிரமாண்டமான படங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்திருக்கும் கே.புரொடக்ஷன்ஸ் இன்னும் பல பிரமாண்டமான படங்களை தயாரிக்க உள்ளது.
பாகுபலி , பாகுபலி – 2 இரண்டு படங்களையும் மிக பிரமாண்டமாக தயாரித்ததின் மூலம் இந்திய சினிமாவை உலக அளவில் பேசவைத்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி , இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் தயாரிப்பளர் எஸ்.என். ராஜராஜன்.