விஷால் – தமன்னா நடிக்கும் கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்
இசை – ஹிப் ஹாப் தமிழா
பாடல்கள் – நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா
எடிட்டிங் – ஆர்.கே.செல்வா
ஸ்டன்ட் – கனல்கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்
கலை – உமேஷ்குமார் நடனம் – தினேஷ், ஷோபி
தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த்
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….

விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும், இதர காட்சிகளுக்காகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் கைவண்ணத்தில் பிரமாண்டமாய் ஏராளமான அரங்குகள் அமைக்கப் பட்டு படமாக்கப் பட்டு வருகிறது. முதல் பாதியில் சூரியும் , இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், காமெடி படமாக உருவாகி தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

Previous articleMadurai Super Giants Team Launch Pics
Next articleநாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “