நடிகர் விஜய் சேதுபதி உட்பட நான்கு சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கிறது சிபிராஜின் ‘கட்டப்பாவ காணோம்’ திரைபடம்

353
சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படமானது, அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்தி கொண்டே போய் கொண்டிருக்கிறது. ‘விண்ட் சைம்ஸ்’ மீடியா எண்டர்டைன்மெண்ட்  நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி சேயோன். 
 
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு வாஸ்து மீனை மையமாக கொண்டு உருவாகி வரும்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படமானது தற்போது மேலும் நான்கு சுவாரசியங்களை ரசிகர்களுக்காக வழங்கி இருக்கிறது. 
 
முதலாவதாக,  நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக  இந்த   ‘கட்டப்பாவ காணோம்’  திரைப்படத்தில் குரல் கொடுத்து இருக்கிறார்.
 
 இரண்டாவதாக, நடிகர் விஜயின் அறுபதாவது படத்தில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரமான  பேபி மோனிக்கா, இந்த  ‘கட்டப்பாவ காணோம்’  படத்தில் சிபிராஜுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிபிராஜும், பேபி மோனிகாவும் நடித்திருக்கும் காட்சிகள் யாவும் ரசிகர்களுக்கு  புதுமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 மூன்றாவதாக, இசை உலகில் தன்னுடைய தனித்துவமான குரலால் இசை பிரியர்களை தன் வசப்படுத்தி இருக்கும் சிட் ஸ்ரீராம் இந்த  ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் ஒரு டூயட் பாடலை பாடியிருக்கிறார்.
 
 நான்காவதாக, மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலம் அடைந்து, தற்போது கபாலி படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற  மைம் கோபி,  இந்த  ‘கட்டப்பாவ காணோம்’  படத்தில் முதல் முறையாக  முழு நீள வில்லனாக நடித்திருக்கிறார். இப்படி ஏகப்பட்ட சுவாரசியங்களை அடுக்கி கொண்டே போகும்  ‘கட்டப்பாவ காணோம்’  திரைப்படத்தின் முதல் போஸ்டரானது நாளை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Previous article‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது ‘சோனி மியூசிக்’ நிறுவனம்
Next articleEVERGREEN MOVIE INTERNATIONAL V.A.DURAI வழங்கும் “காகித கப்பல்”