“தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து செல்லும் வலிமை எங்கள் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்திற்கு இருக்கிறது…” என்கிறார் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் கதாநாயகி சாட்னா டைட்டஸ்.

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவில் இருந்து உதயமான சாட்னா டைட்டஸ். தன்னுடைய காந்தக கண்களாலும், வசீகரமான தோற்றத்தாலும், ஒரே படத்தில் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து சென்ற சாட்னா டைட்டஸ், தற்போது கயல் சந்திரனுடன் ஜோடி சேர்ந்து,  ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘டூ மூவிபஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும்  இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படத்தில், ஒளிப்பதிவாளராக ஜோ மார்ட்டின் (வில் அம்பு), இசையமைப்பாளராக அஷ்வத் (நளனும் நந்தினியும்), படத்தொகுப்பாளராக  வெங்கட் (மிருதன்), கலை இயக்குனராக  ரெமியன் (அம்புலி, பண்டிகை) மற்றும்   ஸ்டண்ட் மாஸ்டராக  பில்லா ஜெகன்  என பல திறமை படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் பணி புரிவது  மேலும் சிறப்பு.
 
“பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு  ஏறத்தாழ அதே மாதிரியான கதாப்பாத்திரங்கள்  தான் வந்து கொண்டிருக்கிறது.  நான் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாப்பாத்திரமும்  தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் பதிய வேண்டும். இந்த கதாப்பாத்திரத்தை சாட்னா டைட்டஸ் கன கச்சிதமாக திரையில் பிரதிபலித்து இருக்கிறார் என்று அவர்கள் சொல்லும் தருணங்களை தான் என்னுடைய முழுமையான வெற்றியாக நான் கருதுகிறேன். அப்படி நான் தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ நிச்சயமாக தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை  பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” 
 
“எந்த ஒரு விஷயத்தையும் ஜாலியாக எடுத்து கொள்ளும்  மாடர்ன் பெண்ணாக இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  படத்தில் நான் நடித்து வருகிறேன். இதுவரை நான் பழக்கப்படாத ஒரு வேடம் என்பதால், எனக்கு இந்த கதாப்பாத்திரத்தை பற்றி நன்கு அறிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது…ஒரு மாடர்ன் பெண்ணின் நடை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிவார்கள், பேசும் விதம், மற்றவர்கள் மத்தியில் தைரியமாக பேசக்கூடிய தோரணை என பல குணாதிசயங்களை இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  படத்திற்காக நான்  உள்வாங்கி இருக்கிறேன். என்னுடன்  இணைந்து நடிக்கும் கயல் சந்திரன் ஒரு ஹீரோவாக இல்லாமல் எனக்கு சிறந்த நண்பராகவும், படப்பிடிப்பு களத்தில் எனக்கு பக்கபலமாகவும் செயல்பட்டு கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது…நிச்சயம் எங்களின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  படமானது தமிழக ரசிகர்களின்  உள்ளங்களை கொள்ளை அடித்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… ‘ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தமிழை சரளமாக பேசும்  ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின்  கதாநாயகி சாட்னா டைட்டஸ்.

 

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Ponniyin Selvan (PS1) Movie Release on Sept 30th Poster
Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Previous articleஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்
Next article“பயம் ஒரு பயணம்’ படத்தை தனியாக பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை..”என்கிறார் இயக்குனர் மணிஷர்மா