ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்

302
காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையே வாள் சண்டை பயற்சி மேற்கொண்டுவருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், RJ ப்ளேட் சங்கர், RJ மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
இயக்கம் – சண்முகம் முத்துசாமி
தயாரிப்பு – M.S.சரவணன்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – PK வர்மா
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைபயிற்சி – திலிப் சுப்பராயன்
நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – M.செந்தில்
நிர்வாக தயாரிப்பு – M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்
Previous articleCelebrities Payed Homage & Last Respect To Legendary Writer Producer & Director Panchu Arunachalam
Next article“தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து செல்லும் வலிமை எங்கள் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்திற்கு இருக்கிறது…” என்கிறார் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் கதாநாயகி சாட்னா டைட்டஸ்.