கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

304

கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான  படங்களில்  நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதாயாககியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  பாண்டி அருணாசலம்

இசை   – ஜூட் லினிக்கர்

பாடல்கள்   –  மணி அமுதன்

ஸ்டன்ட்  –  டேஜ்ஜர் மணி

கலை   –  தியாகு

நடனம்   –  சந்தோஷ்

எடிட்டிங்  –  ஜோதி பிரகாஷ்

தயாரிப்பு  மேற்பார்வை  –  எஸ்.எஸ்.ஸ்ரீதர்

தயாரிப்பு   –  C.பழனி, R.ஐய்யனார்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  ஆர்.ஐய்யனார்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

முழுக்க முழுக்க கிராமத்து கதை !

 +2 படிக்கும் மாணவனுக்கும் 10 வது படிக்கும் மாணவிக்குமான காதல். ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது.

பொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம், செஞ்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் ஆர்.ஐய்யனார்.

Previous articleKadalai Movie Stills
Next article“கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்