சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” எனும் சிம்பா படத்தின் பாடலை பிரபுதேவா வெளியிடுகிறார்

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல,  அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார்    

தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இயக்குனர்  தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்கவைக்கும்படியாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், சிம்பா  COMPLETE STONER MOVIE.

இப்படத்தின் முக்கிய மற்றும் அனைவரையும் கவரும் பாடலாக இருக்கும் சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை இன்று மாலை நடிகர் பிரபுதேவா தனது டிவிட்டர் மூலமாக வெளியிடுகிறார்.

ஒரு பெரிய நடிகர் பாடிய பாட்டை மற்றொரு பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் வெளியிடுவது தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் இசை உரிமைகளை கைபற்றியுள்ள திங்க் முயுசிக் நிறுவனம் “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை இன்று மாலை அவர்களின் Youtube சேனலில் வெளியிடுகின்றனர்.

பரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரேம்ஜி சிம்பாவில் ஒரு மிக முக்கியமான வேடமேற்று நடித்திருக்கின்றார். கதாநாயகியாக பானு மெஹ்ராவும், இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில்  ரமணாவும் நடித்திருக்கிறார்கள்.  தமிழுக்கு புதுவரவாக ஸ்வாதி தீக்‌ஷித் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

DIRECTOR : ARVIND SRIDHAR

PRODUCER: K.SIVANESHWARAN

CINEMATOGRAPHY : SINU SIDHARTH

MUSIC : VISHAL CHANDRASEKHAR

LYRICIST: VIVEKA,JUDE CHRIS,&CHARUKESH

EDITING : ACHU VIJIYAN

ART DIRECTOR: VINOTH RAJKUMAR & ANTONY

STILLS : “STILLS”SIVA, MOTHILAL

COSTUME DESIGNER : S. ASHOK KUMAR

P.R.O : NIKKIL

STUNT : “BILLA” JAGAN

DESIGNS:10GB &BOBBY

CHOREOGRAPHER : POPPY, SATHISH

LINE PRODUCER : V.SATHISH KUMAR

PRODUCTOIN MANAGER :”THENI” SHANKAR