ஒரு புறம் சென்னை 28 – இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம், இயக்குனர் வெங்கட் பிரபு சரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகிறார் என்கிற வதந்தியும் பரவி கொண்டு இருக்கிறது. இப்படி ஆதாரமற்ற செய்திகளை படிக்கும் போது தனக்கு மிகுந்த மன வேதனையாக இருக்கிறது என வருத்தம் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
“நான் தற்போது சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். என்னுடைய வருங்கால படங்களை விரைவில் நான் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கும் தருவாயில், இப்படி ஒரு வதந்தி பரவி கொண்டிருக்கிறது. சரோஜா – 2 படத்தை பற்றி நான் சிறிதளவு கூட யோசித்தது இல்லை….தற்போது என்னுடைய முழு கவனமும் சென்னை 28 – பாகம் 2 மீது தான் இருக்கிறது. எப்படி 2007 ஆம் ஆண்டு ‘சென்னை 28′ தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை ஏற்படுத்தியதோ, அதே போல் 2016 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும்…..2007 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளும் தற்செயலாக லக்கி எண்ணான ஒன்பதில் தான் முடிகிறது…’ என்று தனக்குரிய தனித்துவமான நகைச்சுவை உணர்வோடு கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.