தமிழக ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் திரைப்படம் ‘ரெமோ’. முற்றிலும் புதுமையான கதை களம், மிகச்சிறந்த மார்க்கெட்டிங் யுக்தி என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த செய்தியை ரெமோ படக்குழுவினர், தங்களுக்கே உரிய பிரமாண்ட விதத்தில் அறிவித்தனர்.
“சொன்ன தேதியில் படப்பிடிப்பை முடிப்பது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஒரு மிக பெரிய சவாலாக தான் இருக்கும். அந்த வகையில் நாங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் எங்கள் படப்பிடிப்பை முடித்து இருக்கிறோம். ஒரு தயாரிப்பாளராக இதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்காது. மிக விரைவில் எங்களின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நிறைவேற உள்ளது. தசரா விடுமுறை நாட்களான அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘ரெமோ’ படமானது நிச்சயமாக ரசிகர்களின் அன்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.