உண்மை காதலை ‘ஏஞ்சல்’ மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி

“தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்…” என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய ‘ஏஞ்சல்’ மியூசிக் வீடியோ மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி (‘உறுமீன்’). ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இயக்குனர் நாராயண் நாகேந்திர ராவ் இந்த ‘ஏஞ்சல்’ மியூசிக் வீடியோவை இயக்க, அச்சு ராஜாமணி மற்றும் டோம்மினிக்கா கமின்ஸ்கா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதயத்தை வருடிச் செல்லும் இந்த ‘ஏஞ்சல்’ மியூசிக் வீடியோவிற்கு நந்தாவின் நடனமும், வசந்தின் ஒளிப்பதிவும் மற்றும் சான் லோகேஷின் படத்தொகுப்பும் பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“உண்மையான காதல் என்பது மன்னிப்பது கிடையாது மறப்பது; அது  சுயநலம் பார்க்காதது. அதற்கு  கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. அப்படிப்பட்ட புனிதமான காதலானது  இன்றும், என்றும் என்றென்றும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனை நாம் எல்லோரும் கொண்டாட வேண்டும் . அது தான் எங்களின் ‘ஏஞ்சல்’….என்று கூறுகிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி.