உலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பயணம் திரையிடப்படவுள்ளது

இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. ஒவ்வோரு வருடமும் தனதுஇசையை வெளிநாடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசைப்பயணம் மேற்கொண்டுஇசைப்பிரியர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

இந்த வருடம் அமேரிக்காவில் உள்ள New Jersey, San Jose, Chicago, Atlanta, Dallas, Virginia ஆகிய 7 இடங்களில் இசைமற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இரு துறைகளிலும் சிறந்து விளங்கி அபார வரவேற்ப்பையும் பாராட்டையும்பெற்றார்.

இவரது இசை அற்பணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இவர் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை உலகில்முதன்முறையாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் IMAX திரையரங்கில் Dolby Atmos கூடிய தொழில்நுட்பத்துடன் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மாலை 7 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சீரஞ்ஜீவி, நாகார்ஜுனா, பிரபு தேவா, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்குதிரையுலக முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டுசிறப்பிக்கவுள்ளனர்.

விரைவில் சென்னையிலும் பிரபலங்களின் முன்னிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சுற்றுப்பயணம்திரையிடப்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleCelebrities Watch Dhuruvangal Pathinaaru – D16 Photos
Next articleசந்தானம் – டைரக்டர் மணிகண்டன் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் இணையும் படம்