தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா இசை பிரியர்களின் எதிர்பார்ப்பையும் உயர்த்தி கொண்டே போகிறது, சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல் வெளியீட்டிற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் மேற்கொள்ள இருக்கும் நெடு தூர பயணம். இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் யூடூப்பில் பதிவேற்றம் செய்திருக்கும் “வாடி வாடி என் கண்ணு குட்டி” என்னும் படத்தின் முதல் பாடலின் டீசரானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கி இருக்கிறது. சென்னை 2 சிங்கப்பூர் படம் ஒரு காதல் கலந்த அதிரடி படம் என்பதை நன்றாகவே உணர்த்துகிறது இந்த முப்பத்தொன்பது நொடிகள் ஓடக்கூடிய டீசர். வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்க இருக்கும் சென்னை 2 சிங்கப்பூர் பயணத்தின் போது இந்த முழு பாடலும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Home Tamil Cinema News ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளது ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “வாடி வாடி என் கண்ணு குட்டி”...