ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது இயக்குனர் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம்

334
ஜெய் – சந்தானம் – வி டி வி கணேஷ் ஆகியோரின் மூவர் கூட்டணி எங்கு இருக்கிறதோ அங்கு  கலகலப்புக்கும், கலாட்டாவிற்கும் பஞ்சம் இருக்காது என்பதை உணர்த்த இருக்கும் திரைப்படம், இயக்குனர் கெளதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. அறிமுக இயக்குனர் பிரேம் சாய் இயக்கி, பாடகர் கார்த்திக் இசையமைத்திருக்கும்   இந்த ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படத்தில் நடிகை யமி கெளதம் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். நாசர், தம்பி ராமையா, மற்றும் அஷுடோஷ் ராணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த  ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’  படத்தின் ‘மாயா’ மற்றும் ‘கலக்கு’ பாடல்கள், ஏற்கனவே  ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம்  ஒரு திரில்லர் அனுபவத்தையும் ரசிகர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. எளிமையான வேலையாக இருந்தாலும்  தனக்கு பிடித்தமான  வேலையை செய்வதால் எப்படி ஒருவன் அசாதாரண மனிதனாக இருக்க முடியும் என்பதை மையமாக கொண்டு இந்த கதை நகரும்.  எங்கள் படத்திற்கு  வலுவான தூணாக செயல்பட்ட கெளதம் மேனன் சார்  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வெறும் இள வட்டாரங்களுக்கு  மட்டுமில்லாமல்  அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக எங்களின் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் இருக்கும். ஜெய் — சந்தானம் – வி டி வி கணேஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள காட்சிகள் யாவும் ரசிகர்களை வாய் விட்டு சிரிக்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’  படத்தின் இயக்குனர் பிரேம் சாய்.
Previous articleரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளது ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “வாடி வாடி என் கண்ணு குட்டி” பாடல்
Next articleIru Mugan – Official Trailer