டிஜிட்டல் புரட்சியில் முக்கியமான வரவு வீடியோ கேமரா அமைந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் சிறிய வகை கையடக்க கேமராக்கள், காதலியுடனோ அல்லது மனைவியுடனோ அந்தரமாக இருப்பவர்கள் அதை படம்பிடித்து வைத்துக்கொண்டு பின் வரும் நாட்களில் அதை பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறார்கள். சில நேரங்களில் அந்த செல்போன் தவறுதலாக காணாமல் போனாலோ அல்லது பழுது பார்க்க தரும்போது அந்த வீடியோ காட்சியை காணும் நபர்கள் தான் பார்த்து ரசிப்பதோடு நண்பர்களுக்கும் அனுப்புவது. இணையதளங்களில் பரவி விடுவது. என செயல்படுவதினால் இதில் இருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் சமுதாயத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள்.
சமீபகலாங்களில் இதனால் சில தற்கொலைகள் மற்றும் கொலை சம்பவங்களும் நடந்தேறியது இது போன்ற செயல்பாடுகள் தவறு என்று வலியுறுத்தும் விதமாக தயாராகியுள்ள படம் தான் L.P.R.புரெடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள “ மாற்றான் தோட்டத்து மல்லிகா “ இதில் ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனா ராய், நிஷா, ஆலிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது.
ஒளிப்பதிவு – ரமேஷ்
இசை – ராஜ்பாஸ்கர்
எடிட்டிங் – முத்து
பாடல்கள் – மோ.கோதண்டராமன், ரதன் சந்திரசேகர்
தயாரிப்பு மேற்பார்வை – செங்குட்டுவன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜேஷ்வரன். இவர் ஏற்கனவே “ கள்ளச்சாவி “ என்ற வெற்றிப்படத்தை தந்தவர். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.