காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது, அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கும் ‘டூப்லைட்’ திரைப்படம்

360
எல்லா படத்திற்கும் ரசிகர்களை கவரக்கூடிய தலைப்புகள் அமைந்துவிடாது. ஆனால் ஒரு  சில படங்கள் மட்டும் தான் அந்த யுக்தியை மிக சரியாக கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கி, ‘ஆஸ்ட்ரிச் மீடியா புரோடக்ஷன்’ தயாரித்து வரும்  ‘டூப்லைட்’ திரைப்படம். “என்னுடைய நீண்ட நாள் கனவு தற்போது ‘டூப்லைட்’ திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் நான் எழுதிய கதையானது எங்களின் தயாரிப்பாளர் ரவி நாராயணன் அவர்களை ஈர்க்க, அந்த கதை இப்போது முழு நீள திரைப்படமாக உருவாகி வருகிறது…” என்று புன்னகையுடன் துவங்குகிறார் இயக்குனர்  இந்த்ரா.
 
அடிப்படையில் என்ஜினீயரான இயக்குனர் இந்த்ராவிற்கு, உலக புகழ் பெற்ற பழம்பெரும் கலைஞர்கள் சார்லி சாப்ளின், மைக்கல் ஜாக்சன் மற்றும் ஜாக்கிச்சான் ஆகியோர் உந்துதலாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ” எங்கள் படத்தின் தலைப்பானது வெறும் கதையோடு மட்டும் பயணிக்காமல், கதாப்பாத்திரத்தோடும் ஒட்டி இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம். அந்த தேடலின் முடிவில் நாங்கள்  தேர்ந்தெடுத்த தலைப்பு தான் ‘டூப்லைட்’. அதுமட்டுமின்றி பாலிவுட் மாச்சோ – மேன்  சல்மான் கான் அவர்களும் அவரின் புதிய படத்திற்கு இந்த ‘டூப்லைட்’  என்னும் தலைப்பை தான் வைக்க இருக்கிறார்.. இப்படி எங்கள் இருவரின் ரசனைகளும் ஒரே பாதையில் பயணிக்கிறது என்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது…”
 
“சராசரி கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு ஆண்,  தன்னை விட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்க,  அவர்கள் இருவரின்  வாழ்க்கையிலும் உள்ளே புகுந்து காய் நகர்த்துகிறார் ஒரு டாக்டர். அது எங்கே போய்  முடிகிறது என்பது தான் எங்கள் ‘டூப்லைட்’ படத்தின் ஒரு வரிக் கதை. இது ஒரு  பிளாஷ் பாக் படம் என்பதால் எங்களுக்கு   படப்பிடிப்பு சற்று கடினமாக தான் இருந்தது…. இந்த படத்தில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்த பாண்டிய ராஜ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பல சிறப்பான அனுபவங்களை கற்று தந்திருக்கிறது. நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களின் டூப்லைட் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யும் என பெரிதும் நம்புகிறேன்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘டூப்லைட்’ படத்தின் இயக்குனரும் – கதாநாயகனுமான  இந்த்ரா.  காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த ‘டூப்லைட்’ படத்தில் தியா கதாநாயகியாக நடிக்க பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி பாபு மற்றும் ரம்யா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது மேலும் சிறப்பு.
Previous articleKabali Success Press Meet Photos
Next articleபுதுமையான காட்சிகளோடு உருவாகியுள்ளது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம்