இசைஞானி இளையராஜாவை கண்கலங்கவைத்த- களத்தூர் கிராமம்

A R மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி  தயாரிக்கும் களத்தூர் கிராமம். இத்திரைப்படத்தை சரண் K  அத்வைதன் என்பவர் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, இது இசைஞானி அவர்களுக்கு 1001 வது திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு  புஷ்பராஜ் [ நாளைய இயக்குனர் விருது பெற்றவர்] மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் ,கலை தோட்டா தரணி , பாடல்கள்  தாமரை, நா முத்துக்குமார், மதன் கார்க்கி எழுதியுள்ளனர். சண்டைப்பயிற்சி மகேஷ், நடனம் தினேஷ், தயாரிப்பு ஆவுடைத்தாய் ராமமூர்த்தி.இப்படத்தில் மகாநதி, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற வெற்றி படங்களை தயாரித்த  ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் S.A ராஜ்கண்ணு அவர்களின் மகன் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார், நாயகியாக ரஜினி மஹாதேவ் {உதயா டிவி செய்தி வாசிப்பாளர்} இவர்களோடு கிஷோர், யாஜ்னா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். .   படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

​இப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பில் கலந்துகொண்ட இளையராஜா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கண்டு கண்கலங்கி இயக்குநரை க

ட்டிப்பிடித்து பாராட்டினாராம்

​.​