2016 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட நாளான செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவா நடிப்பில் விஜய் இயக்கும் ‘தேவி’ திரைப்படம்

297
பொதுவாகவே ஒன்பது என்னும் எண்ணானது அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களிலும் ஒரு பாசிட்டிவ் எண்ணத்தை விதைக்கும். அந்த வகையில், இந்த 2016 ஆம் வருடத்தில், மிகவும் சிறப்பான நாளாகவும், அதிர்ஷ்டமான நாளாகவும் கருதப்படுவது 9.9.2016. அப்படிப்பட்ட சிறப்பான நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவா – தமன்னா நடிப்பில் விஜய் இயக்கும் ‘தேவி; திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த ‘தேவி’ திரைப்படத்தை பிரபுதேவாவும், அவருடன் இணைந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில்  டாக்டர். கணேஷும் தயாரித்து வருகின்றனர். விநியோகத் துறையின் மாபெரும் அடையாளமாக உருவாகி வரும் ‘ஆரா சினிமாஸ்’  இந்த  ‘தேவி’ திரைப்படத்தை தமிழ்நாடு அளவில்  விநியோகம் செய்வது குறிப்பிடத்தக்கது.
“தேவி’ படத்தை மேலும் மெருகேற்றும் அனைத்து இறுதிக்கட்ட வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மும்மொழி திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிடுவது என்பது சற்று கடினமான காரியம் தான். இருந்தாலும் எங்களின்  ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒற்றுமையால் அதை நாங்கள் வெகு சிறப்பாக செய்து வருகிறோம். இந்த வருடத்தின் சிறப்பான நாளான 9.9.2016 அன்று எங்கள் ‘தேவி’ படத்தை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்…” என்கிறார் ‘தேவி’ படத்தின் இயக்குனர் விஜய்.

 

Previous articleInayathalam Movie Pooja Stills
Next articleஜெய் – அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா