டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் “ 88 “

ஜெ.கே மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.ஜெயகுமார் தயாரிக்கும் படம் “ 88 “ இந்த படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர் மிஸ் இண்டியா ஏசியா 2015 ல் பட்டம் வென்றவர். மற்றும் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீராகிருஷ்ணன், பவர்ஸ்டார், சாம்ஸ், அப்புகுட்டி, சாப்ளின்பாலு, சிசர்மனோகர், சேரன்ராஜ், பாய்ஸ் ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார் மதன். படம் பற்றி இயக்குனர் மதனிடம் கேட்டோம்…
இன்றைய டெக்னாலஜி அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாகவும் கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த டெக்னாலஜி வளர்ச்சி எப்படி நமது கலாச்சார சீர்கேட்டை உருவாக்குகிறது. என்பது இந்த படத்தின் கதை ! சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்..மறைத்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் பகிரங்கப்படுத்தப் படும் போது ஏற்படும் பிரச்சனைகளையும் இதில் கையாண்டுள்ளோம்.  ஒரு நல்ல கருத்தை கமர்ஷியலாகக் கையாண்டுள்ளோம். படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம், கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் மதன்.

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleAtharvaa’s Kiickass Entertainment “Semma Botha Agathey” is Nearing Completion
Next articleஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர்