kabali movie leaked online | கபாலி படம் பார்க்க போன கதை.

 

எப்படியான படமாக இருந்தாலும் தியேட்டரில் போய் பார்த்து விடுவது வழக்கம்….

டிக்கெட் பஞ்சாயத்து பெரிய விஷயமாக போய் விட்டது..
நண்பர் ரபிக்கிடம் டிக்கெட் சொல்லிட்டேன்..… ஆனா தூக்கம் வரலை தூங்காம கண் முழுச்சி இருக்க காரணம் நாலுமணிக்கு ரோகிணி தியேட்டர்ல ஷோ….. ஒரு சினிமா ரசிகனா அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு… ஒரு மாசத்துக்கு மேல நடக்கும் கபாலி படத்துக்கான புரமோஷன்.,. அதனால் தூக்கம் வரலை… ஒரு மணிக்கு தூக்கம் கண்ணை சொழட்டுச்சி…
போக்கிரி படத்துல பிரகாஷ்ராஜ் தூங்காம இருக்க டார்சர் பண்ணுவங்களே… அது போல நானே எனது கன்னத்தை அடித்து தூக்கத்தை விரட்டி எழுந்தேன்…

நான் நடு ஜாமத்துல திடிர்ன்னு எழுந்ததும்..
என்னங்கன்னு விட்டாம்மாவும் பதறி எழுந்தாங்க…

இரண்டரை மணிக்கு குளிக்க போனேன்..
வீட்டம்மா இருங்க சுடத்தண்ணி வச்சி கொடுக்கறேன்னு சொல்ல… சுடத்தண்ணி வச்சாங்க…. தூக்கமான கண்ணை பார்த்த வீட்டம்மா சுட தண்ணி சூடாகறதுக்குள்ள தூக்கத்தை விரட்ட காபி போட்டு கொடுத்து தூக்கத்தை விரட்டி
ஒரு விழியா குளிச்சி டிரஸ் பண்ணி இருக்கற நாலு முடியை கண்ணாடி பார்க்காமலே வரட்டு வரட்டுன்னு சத்தம் வர தலை வாரி…
(தலைவாரி என்ற வார்த்தை பிரயோகம் அதிகம்தான்.. இருந்தாலும் இது நாலு மயிரை பத்திரமா பாதுகாக்கும் செயல் ஓகே..)

வீட்டம்மா விடியகாத்தாலை மூணு மணிக்கே வாசல் தெளித்து கோலம் போட்டாங்க…
ஏன்னா ? புருசன் வெளியே போக விட்டு….. வாசல் தெளிக்க கூடாதாம்…

கோலம் போடறதை மாடியில் இருந்து பார்த்தேன்….

நல்லவனுக்கு நல்லவன் படத்துல

உன்னைதானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானேன்னு பாட்டு விவதபாராதி வர்த்தக ஒளிபரப்பு போல மனசுல ஓட ஆரம்பிச்சிது…

பாட்டை கட் பண்ணிட்டு ஜாக்கி சினிமாஸ் கேமரா பேகேடோ வண்டி சாவி எடுத்துக்கிட்டு நான் படி இறங்கினேன்…

வழக்கமா போயிட்டு போன் பண்ணுங்க என்று சொன்னார்… இல்லை நீ தூங்கு எஸ்எம்எஸ் அனுப்பறேன்னு சொன்னேன்… வழக்கம் போல சொல்லிவிட்டு எஸ்எம்எஸ் மற்றும் போன் சேர்ந்தவுடன் செய்வதில்லை… காரணம்.. அந்த சூழலில் மறந்து விடும்…

மயிலையில் இருந்து வண்டி ஸ்டார்ட் செஞ்சேன்…. கபிலன் போன் செஞ்சான்.. அண்ணா… பிரேக்கிங் நியூஸ்… காசி தியேட்டர்ல நாலு மணி ஷோ கேன்சல் டிஸ்ட்ரிபியூட்டர் பிரபளமாம்..

அப்ப ரோகிணியில???

நான் குளிச்சிட்டு கிளம்பிட்டேன்டா..?

அண்ணா.. நீ கௌப்பி தியேட்டருக்கு போயிடு அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொன்னான்..

நான் வாகனத்தை கிளம்பினேன்…
காலை எட்டு மணி வரைக்கு நெறை முக்காடு போட்டுக்கிட்டு பெட்ஷிட்டை போர்த்திக்கிட்டு தூங்கும் என் தேசத்து இளைஞர்கள் விடியற்காலை மூன்று மணி வக்கிலேயே சாலைகளில் பரபரப்பாய் டிரிபில்ஸ் போய்க்கொண்டு இருந்தார்கள்..

சாலைகள் எங்கும் டூவிலரில் இளைஞர்கள் சில இடங்களில் இளைஞிகளும் பேவிக்காலின் பலமான இணைப்பு போல இளைஞனின் முதுகில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டு சென்ற போது… சீக்கரம் கல்யாணம் பண்ணி தொலைச்சிட்டமோ என்ற போங்கு மனதில் தோன்றியது…

ஆக்சிலேட்டரை திருகி ரோகிணி நோக்கி பயணப்பட்டடேன்.
மூடர் கூடம் படம் போல ரோகிணி தியேட்டர் முன் கதை சுருக்கம்.

2000 ஆம் ஆண்டில் ரோகிணி தியேட்டர் காதலர்களின் புகலிடம் படம் விட்டு வெளியே வரும் காதலர்கள்… சிலர் பயத்தோடும்… படம் பார்க்கும் போது இருட்டில் மிச்சம் விட்டதை எங்கே முடிக்கலாம் என்று கண்களில் தேடலோடும் வெளி வருவார்கள்… கார்னர் சீட் கிடைப்பது அரிதிலும் அரிதான செயல்… காரணம் டிக்கெட் கவுண்டரில் கெஞ்சுவார்கள்…

ரோகினி மெயின் ஸ்கிரினில்தான் படம் பார்க்க எனக்கு பிடிக்கும்… மற்ற ஸ்கீரின்கள் எல்லாம் கோமன துணி போல நீண்டு இருக்கும்… அதனால் ரோகிணி மட்டும் என் சாய்ஸ்…

எனது நண்பரின் தங்கை ஓடிப்போய் விட்டார்… அவர் இடிந்து போய் உட்கார்ந்தார்… தங்கையை கண்டு பிடித்து காதல் திரைப்படம் போல பிரித்து வைத்து காதலனை பைத்தியக்காரன் போல சிக்னலில் அலைய விடாமல் காதலினடமே சேர்த்து வைத்தோம்….
நண்பன் சொன்னான்..

மச்சான் மனசு சரியில்லை… ஒரு பொரிக்கி பேமானியை செலக்ட் பண்ணி இருக்காடா… மச்சான் படத்துக்கு போவோமோ என்றான்.. சரி என்று ஒரு பீர் சாப்பிட்டு விட்டு போனோம்.

பிரபுதேவா நடித்த ஏழையின் சிரிப்பில்… படம் வெளியானது 2000 ஆம் ஆண்டு… ருபினியில டிக்கெட் கிடைச்சது… படம் பார்த்தோம்…
அதன் பிறகு எல்லா தியேட்டர்லயும் டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டம் வந்த பிறகும் ரோகிணியில் கொண்டு வரவில்லை.. அதனால் அந்த பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.
சரியாக 15 வருடம் கழித்து ரோகிணி வளாகத்துக்கு சென்றேன்…

வண்டியை பார்க் செய்தேன்… ஊரில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா போல தியேட்டர் களை கட்டியது… ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தை படமாக்கினேன்.. வாழ்க்கையில் முதல் முறையாக ரஜினியின் பெண் ரசிகர்கள்… குத்து டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார்கள்… பயம் இல்லாமல் பட்டாசு வெடித்தார்கள்…

சில்வர் ஸ்கிரின் என்றார்கள்…நானும் ரபிக்கும் தியேட்டருக்கு சென்றோம்.. கோமனதுணி போல நான் வெறுத்த அதே ஸ்கிரின். பட் வேலை நடந்துக்கொண்டு இருந்தது.. ஏசி இல்லை…

இருக்கையில் அமர்ந்தேன்.. ஐ ரோவில் சீட் நம்பர் ஒன்…

திரையை பார்த்தால் டிடிஎஸ் ஸ்பிக்கர் பாதி திரையை மறைத்தது… நம்ம தியேட்டர் அரேன்ஸ் மன்ட் அந்த மாதிரி…

கார்திக் சுப்புராஜ் மற்றும் பாபிசிம்ஹா எல்லாம் நான் பார்த்த தியேட்டர்லதான் பார்த்தாங்க..

இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து இருக்கோமேன்னு நினைச்சேன்… கதவைல்லாம்பூட்டியாச்சி காரை நானே ஓட்டறேன் சங்கர் சிமென்ட் ஆட்ல சொல்லுமே அந்த பொண்ணுதான்… ஆங்… கண்டு பிடிச்சிட்டேன்.. இந்த மாதிரி நிறைய பேரு படம் பார்த்தாங்க…

ரஜினி வந்தார்… எல்லாரும் எழுந்து நின்னு ஆட்டம் பாட்டம்ன்னு கலக்குச்சி…

மைம் கோபியை கொல்ற வரைக்கு தியேட்டர்ல செம கொண்டாட்டம்தான் போங்க…

அதன் பிறகு ரஜினி ரசிகர்கள் ஒட்கார்த்வங்கதான்… அதன் பின் கிளைமாக்ஸ்ல கிட்ட கை தட்டினாங்க… அவ்வளவுதான்.. உற்சாக மன நிலையோடு வெளிய வரும் ரசிகர்கள் அமைதிய வெளியே வந்தாங்க…
ஆறே முக்கா இருக்கும்….

தியேட்டரை விட்டு வெளிய வந்தா பைக் எடுக்கற எடுத்துல..

பாரு மச்சான் விடியகாத்தாலே அதுக்குள்ள கபாலி படத்தை வலையேத்திடானுங்க என்று இரண்டு பசங்க கபாலி திரைபடத்தை செல்போனில் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

ஜாக்கிசேகர்
23/07/2016

#kabali #rajini #superstar #thalaiver #rajinikanth #kabalimovie #tamilcinema #tamilmovie #ரஜினி #ரஜினிகாந்த் #கபாலி #கபாலிதிரைப்படம்.

https://youtu.be/9flxQoTVGPE