“(மீனு)க்கும் எனக்கும் உண்டான காதல், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது” – கதாநாயகி ஐஸ்வர்யா

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை அழகாய் உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடிக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்தில் வாழும் சாதாரண பெண்மணி கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சரி, மாளிகையில் வாழும் இளவரசி கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், இயல்பான பாவனைகளாலும் ரசிகர் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்ற ஐஸ்வர்யா, தற்போது சிபிராஜுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘கட்டப்பாவ காணோம்’. ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து, இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி செய்யோன் இயக்கும் 
இந்த ‘கட்டப்பாவா காணோம்’ திரைப்படத்தில் சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்க்ஸ்டன், திருமுருகன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
 
” இதுவரை நான் நடித்துள்ள சவாலான கதாப்பாத்திரங்கள் யாவும், எனக்கு நற்பெயரை சம்பாதித்து தந்திருக்கிறது. ஆனால் என்னுடைய நிஜ வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்த கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் குறைவு தான். அந்த வகையில் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படதில் என் கதாப்பாத்திரமானது, என்னுடைய வயதையும், என் அன்றாட வாழ்க்கையையும் ஒட்டியே அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி.  இந்த படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மீனு’.  இன்றய காலக்கட்டத்தில் எப்படி சராசரி மாடர்ன் பெண்கள் இருக்கிறார்களோ, அப்படியே என்னுடைய மீனு கதாப்பாத்திரமும் இருக்கும். கிராமத்து பெண் வேடம், சிட்டி பெண் வேடம் என எந்த வித்தியாசமும் எனக்கு கிடையாது.  இரண்டுமே சரிசமமாய் என் மனதோடு எப்போதும் ஒட்டி இருக்கும் கதாப்பாத்திரங்கள் தான்…” என்று கூறுகிறார் அழகும், அறிவும் ஒருங்கே இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.
 
சந்தோஷ் தயாநிதி (இனிமே இப்படி தான்) இசையிலும், ஆனந்த் ஜீவா  ஒளிப்பதிவிலும் உருவாகும் இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக (இறுதி சுற்று) சதீஷ் சூர்யாவும், கலை இயக்குனராக  லக்ஷ்மி தேவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பல சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கும் கட்டப்பாவ காணோம் திரைப்படமானது விரைவில் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நல்ல காலமாக நீந்தி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படக்குழு

நடிக, நடிகையர்கள்

சிபிராஜ்

ஐஸ்வர்யா

காளி வெங்கட்

மைம் கோபி

சாந்தினி

திருமுருகன்

ஜெயகுமார்
இயக்கம் – மணி செய்யோன்(அறிவழகன் அசோஸியட்)

இசை –  சந்தோஷ் தயாநிதி (இனிமே இப்படித்தான் பட இசையமைப்பாளர்)

எடிட்டிங் – சதீஷ் சூர்யா(இறுதிசுற்று, நான்)

ஒளிப்பதிவு – ஆனந்த் ஜீவா(நவீன சரஸ்வதி சபதம்)

கலை – தேவா

Previous articleEnnama Katha Viduranuga Press Meet Photos
Next articleAfter Jacqueline and Deepika, Kanika Kapoor now sings for Aditi Rao Hydari !!