மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் தலைப்பு

430

ஒரு படத்தின் தரத்தையும், வெற்றியையும் நிர்ணயிக்கும்  சக்தி அதன் தலைப்பிற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி ஒரு வித்தியாசமான தலைப்பை கொண்டு, தமிழ் திரை உலகினரின் கவனத்தை தற்போது ஈர்க்குமாறு செய்து வருகிறது ‘டூ மீடியா பஃஃப்ஸ்’ மற்றும் Across Films தயாரிப்பில் உருவாகி வரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படம். அறிமுக இயக்குனர் சுதர் இயக்கும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படத்தில் கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் முன்னணி வேடங்களில் நடிக்க, பார்த்திபன் ராதாகிருஷ்ணன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அடிப்படையில் சாப்ட்வேர் என்ஜினீரியாக பணிபுரிந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  படத்தின் இயக்குனர் சுதர், நாளைய இயக்குனர் – பகுதி ஐந்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. “‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  தான் என்னுடைய முதல் படம். இந்த படத்தின் தலைப்பானது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருவது, உண்மையாகவே எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இப்படிப்பட்ட அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர்கள் பி.எஸ்.ரகுநாதன் மற்றும் பிரபு வெங்கடாச்சலம் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை  தெரிவித்து கொள்கிறேன்.இசையமைப்பாளர் அஷ்வத் (நளனும் நந்தினியும்),  படத்தொகுப்பாளர் வெங்கட் (மிருதன்), கலை இயக்குனர் ரெமியன், ஸ்டண்ட் கோரியோகிராபர் பில்லா ஜெகன் மற்றும் ஒளிப்பதிவாளர் மகேஷ் என பல திறமை படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் எனக்கு  பக்கபலமாய் அமைந்துள்ளனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்துள்ள பாடலை மையமாக கொண்டு தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற தலைப்பை நாங்கள் வைத்தோம். எப்படி மக்கள் திலகத்தின் பாடலானது ஒரு பாசிட்டிவான ஆற்றலை ரசிகர்கள் உள்ளத்தில் விதைத்ததோ, அதே போல் எங்களின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  திரைப்படமும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். முழுக்க முழுக்க பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் எங்களின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’  திரைப்படமானது ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு செதுக்கப்பட்டு, அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் இயக்குனர் சுதர்.

Previous articleRemo Movie Stills
Next articleஒரு படத்தை உருவாக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது” என்கிறார் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர் டில்லி பாபு