ஒரு படத்தை உருவாக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது” என்கிறார் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர் டில்லி பாபு

தயாரிப்பு துறையில் பாபி சிம்ஹாவின் உறுமீன் திரைப்படம் மூலம்  கால் பதித்து, தற்போது தரம் வாய்ந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கும் இளம் தயாரிப்பாளர்களுள் ஒருவர் ‘ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர்’ டில்லி பாபு.  ஏற்கனவே  இவர் தயாரிப்பில் உருவாகும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பராக நடந்து கொண்டிருக்க, தற்போது ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியானது முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமாருடன் கைக் கோர்த்திருக்கிறது.

“இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்தமான படமாக வலம் வந்து கொண்டிருப்பது, ராம் குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி திரைப்படம் தான். தற்போது நாங்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்த திரைப்படமானது, எங்கள் இருவரின் சினிமா வாழ்க்கையிலும் ஒரு சிறந்த மைல் கல்லாக அமையும் என்பதை உறுதியாக நம்புகிறேன். அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பு துறையில் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் பெயர் மேலோங்கும்.  இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களை தற்போது தேர்வு செய்து வருகிறோம். சிறப்பாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இளம் கதாநாயகன் ஒருவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும்  இந்த அதிரடி திரைப்படமானது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்யும்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர் டில்லி பாபு.