அசத்தும் “செய்” – பர்ஸ்ட் லுக்

நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் “செய்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
 
தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் பாணியில் படத்தின் நாயகன் நகுலும், நாயகி ஆஞ்சலும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தூங்காநகரம், சிகரம்தொடு படங்களின் கேமிராமேன் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிக்ஸ் லோபஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை, ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்னு தயாரித்து வருகிறார்.
 
சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும், படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் படைப்பாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Previous articleநாயகன், நாயகி இல்லாத படம் கில்லி பம்பரம் கோலி
Next articleதாத்தா கலை மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஆராதனா IPS