அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் ‘ரெமோ’ திரைப்படம்

440
நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள்  மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும். அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’.  ஒரு திரைப்படம் என்பதை தாண்டி, மக்களின் ஆழ் மனது வரை சென்று  தங்கியிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஜோடி மட்டுமின்றி  உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்களை இந்த ரெமோ படம் உள்ளடக்கி இருப்பது தான்.
 
‘ரெமோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என  ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும்  மிக பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த  கதைக்களம், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது.  இப்படி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் ரெமோ திரைப்படமானது வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. அனிரூத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள ‘ரெமோ சிக்நேச்சர் தீம்’ மற்றும் ‘செஞ்சிட்டாளே’ பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
 
“எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ,  அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் அயராத உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் கிடைத்த பலனாக தான் இதை நாங்கள் கருதுகிறோம்.  இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு பெரும் மகிழ்ச்சி எந்த விதத்திலும் அமையாது.  எல்லா மொழிகளையும், மதங்களையும் தாண்டி, அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக செயல்படுவது அன்பு தான். ரசிகர்கள் ரெமோ படத்தின் மீது காட்டி வரும் அன்பிற்கு சிறிதளவு கூட  குறையில்லாமல் இருக்கும், அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகும் ரெமோ திரைப்படம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர். டி. ராஜா.
Previous articleKuttram 23 Movie Stills
Next articleRemo Movie Stills