நாயகன், நாயகி இல்லாத படம் கில்லி பம்பரம் கோலி

220

ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் சார்பில் மனோஹரன்.D தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “ கில்லி பம்பரம் கோலி “

இந்த படத்தில் தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ் குமார், தீப்திஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், ஜோ, கே.ஆர்.விமல், ராஜசேகரன், சுரேஷ், ஜெகன், ராஜேஸ்வரி, ஆடி, ஹரிபாபு, விஷ்ணு, ஜெ, பர்ன், ஜேம்ஸ், பாஸ்கர், சமன், குமார், கலை, அர்விந்த், பாலா, டேவிட், காளி, பிரபு, கௌரி, சுபாராவ், சங்கீதா, ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மூணு பசங்க ஒரு பொண்ணு வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்னையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் கில்லி, பப்பரம், கோலி. இந்த படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லாத நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் இது. மலேசியாவில் புத்ரஜெயா என்ற ஊரில் 120 அடி உயரத்தில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் கஞ்சா கருப்பு உட்பட நிறைய பேர் மயங்கினார்கள் என்று நினைத்தோம். அதன் பிறகுதான் அந்த ஊரில் உள்ளவர்கள் இந்த இடத்தில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறினார்கள். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடித்து ஒரு வழியாக இந்தியா வந்தடைந்தோம். இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் மனோஹரன்.D

Previous articleEn Appa – Appa Movie Actor Mukilan Speaks About His Father
Next articleஅசத்தும் “செய்” – பர்ஸ்ட் லுக்