‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ இன்று உங்கள் வாழ்த்துக்களோடு துவங்கும் இளமை ததும்பும் படம் மட்டுமல்ல பெருமை பொங்கும் படம்

Crowd funding முறையில் தயாரிக்கும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன்குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன்…இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில்துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணுவிஷாலுடன் இணையும் ஒன்றும், புதிய இயக்குனர் சுதர்சன் இயக்க “கயல்’ சந்திரன் உடன்நடிக்கும்   2MB  தயாரிப்பில் இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில் -நாளைய தரத்தில்! இன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சில பேச்சுவார்த்தையில். இதை விட , எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதைசொல்ல கேட்ட’உடன்’ நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்துக்கொண்டுள்ளேன் . அதுவும் விரைவில் துவங்கும் . So…குறை ஒன்றுமில்லை -இருந்தால் மறைக்காத மூர்த்தி நானே!

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Ponniyin Selvan (PS1) Movie Release on Sept 30th Poster

‘REEL estate company llp’ என்ற  crowd/proud funding என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனம் துவங்கபணத்தேவை முக்கிய காரணமில்லை. Face book நண்பர்களுக்கான சந்திப்பில் நண்பர் விஜயகுமார்” 10 லட்சம் தான் என்னால் முதலீடு செய்ய முடியும். என்னை போன்றவர்களை இணைத்து ஒருபடம் நீங்கள் எடுக்க வேண்டும் “என வேண்டியதோடு அதற்குரிய காசோலையை கிழித்துகையில் திணித்து விட்டும் போனார். அதை அறிந்த இன்னும் சிலர் தானாக முன்வந்தார்கள்.

அப்படி துலங்குகிறது இப்படம் லாபம் : மிக மிக மிக மிக சிறிய முதலீட்டிற்கு அதீத லாபமும்வரலாம் சொற்ப நஷ்டமும் வரலாம் என்பது கணக்கு. ஆனால் என் கணக்கு நம்பியவர்களுக்குநயாபைசாவாவது லாபமாக கொடுத்து நம்பிக்கையை காப்பாற்றி இந்த சிறு/குறுமுதலீட்டாளர்களை  பாதுகாப்பதின் மூலம் பிற்காலத்தில் பெரிய பட்ஜட் படங்கள் செய்யலாம்.களவு போய்க்கொண்டிருக்கும் திரைத்துறைக்கு புத்துனரச்சி தரும் விதமாக புதியதயாரிப்பாளர்களை அறிமுகம் செய்யலாம். இவ்வகையான தயாரிப்பை என்னைப் போன்றபணத்திற்கு அப்பார்பட்டவர்கள் மட்டுமே நேர்மையாக செய்ய முடியும்.படத்தைத் துவங்கி விட்டுஇதை வெளியிடலாம் என்றே இன்று இடுகிறேன் வெளி! இது இராதாகிருஷ்ணன்பார்த்திபன் இடும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. சத்யா இசையில்  “கண் மூடினால் தெரிவேனே-எனைத் தொட நாடினால் மறைவேனே…’ என்ற மதன் கார்க்கியின் பாடல் யூ(த்)தர்களின் இதயATM-ஐ களவாடும்என்பதில் ஐயமில்லா ஜெயமுன்டு!

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Previous articleஎங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்
Next articleKabali Movie Worldwide Release Poster