தரமான படங்களின் தரத்தை உயர்த்த வரும் வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்

நல்ல படங்களை வெளியிடுவதே எங்கள் தாரக மந்திரம்  என்று கூறுவதோடு நில்லாமல் தரமான படங்களின்தரத்தையும் உயர்த்த வருகிறது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்.

ஒரு வெற்றி படம் அமைவதற்கு நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மட்டும்போதாது. அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், விளம்பர நிறுவனங்களின் பணி முக்கிய பங்குவகிக்கின்றது. பல வருடங்களுகளாக தன் அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்தி கையாண்டு பல வெற்றிபடங்களுக்கும் துணை நின்ற வெங்கடேஷ் ராஜா தற்போது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்என்கிறநிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல் தனது முதல் படைப்பாக WTF என்டர்டெயின்மென்ட்மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்த “மோதிரைப்படத்தை உலகமெங்கும் விமர்சையாகவெளியிடுகின்றது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் சன் மியூசிக் தொகுப்பாளர் (VJ) சுரேஷ்கதாநாயகனாக நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இரைவி மற்றும்குற்றமே தண்டனை படத்தில் நடித்துள்ள பூஜா தேவரியா, சூது கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்தரமேஷ் திலக், யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, முன்டாசுபட்டி படத்தில் நடித்தராமதாஸ் (முனீஸ்காந்த்), யோகி பாபு, மெட்ராஸ் மற்றும் மாரி படங்களில் நடித்த ‘Mime” கோபி, ராஜதந்திரம்படத்தில் நடித்த சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை புவன் நல்லான் R என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வா மற்றும்ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணைஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ஸ்ரீ k ஒளிப்பதிவு செய்ய, இனிமே இப்படிதான் திரைப்படத்தின் இசைஅமைப்பாளரும், A R ரகுமானின் உதவியாளருமான சமீர் d சந்தோஷ்

இசையமைக்கிறார். கலை – பாலசுப்ரமனியன், படத்தொகுப்பு – கோபிநாத்.

இத்திரைப்படத்தின் வெளியீடு தேதி விரைவில் வெளியடப்படும் என்று கூறும் வெங்கடேஷ் ராஜா நல்ல பலதரமான படங்களை பார்த்து வெளியிடும் திட்டமுள்ளதாகவும், வெகு விரைவில் படங்களைதயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.