கமலின் லிப்லாக் சாதனையை ஒரே படத்தில் முறியடித்த லொள்ளுசபா ஜீவா

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் லொள்ளுசபா ஜீவா என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் சங்கீதா பட். இவர் கன்னடத்தில் பல வெற்றிப்படங்களின் கதாநாயகி. கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ரங்கா. தலஅஜித்தின் தீவிர ரசிகரான இவர் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான ஆரம்பம், அட்டகாசம் இரண்டு படங்களின் தலைப்பையும் இணைத்து ஆரம்பமே அட்டகாசம் என்று டைட்டில் பிடித்துள்ளார். ரங்கா ஏற்கனவே இயக்கி இருக்கும் நாய்க்குட்டி படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ரங்காவின் இரண்டாவது படம் இது. சென்னை, கேரளா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உருவாகும் இந்த படம் காதலுடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக உருவாகிறது.

பொதுவாக தமிழ் ஹீரோக்களில் உலக நாயகன் கமல்ஹாசனை தான் முத்த மன்னன் என்று சொல்வார்கள். கமலின் படத்தில் கண்டிப்பாக ஒரு லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெறும். ஆனால் ஜீவா நடிக்கும் இந்த படத்தில் மட்டும் மொத்தம் பத்து லிப்லாக் காட்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் லிப்லாக்கில் கமலின் சாதனையை ஒரே படத்தில் முறியடித்து விட்டார் லொள்ளுசபா ஜீவா என்றே சொல்லலாம்.

லொள்ளுசபா ஜீவா, சங்கீதா பட் தவிர பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத், வாசுவிக்ரம், கு.ஞானசம்பந்தம், முனீஸ், நெல்லை சிவா, தேனடை  மதுமிதா, லொள்ளுசபா மனோகர், லொள்ளுசபா சேசு, லொள்ளுசபா உதய் என ஒரு தமிழ் சினிமாவின் நகைச்சுவை பட்டாளமே இந்த படத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த களம் இறங்கியுள்ளது.  காதல் நகைச்சுவை படமாக உருவாகும் ஆரம்பமே அட்டகாசம் படத்தை சுவாதி பிலிம் சர்க்யூட் சார்பில் மாலதி வேலு, எஸ். சுக்குருல்லா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.