சத்ய ஜோதி films நிறுவனத்தாரின் பிரமாண்டமான படைப்பு . அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்குகிறார்

பாரம்பரியமாக தரமான படங்களை தயாரிக்கும்  பழம் பெரும்  நிறுவனமான சத்ய ஜோதி films தற்போது தயாரிப்பில் இருக்கும்   தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில்  ‘ தொடரி ‘ , விக்ரம் பிரபு  நடிப்பில்  , பிரபாகரன்  இயக்கத்தில் உருவாகும் ”முடிசூடா மன்னன்’  ஆகிய படங்களை தொடர்ந்து  தயாரிக்கும் பிரமாண்டமான படைப்பில்  அஜித் குமார்  நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் சிவா ஆவார். வீரம் , வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் குமாரை சிவா இயக்குவது இது மூன்றாவது முறை.
 
அனிருத் இசை அமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பில், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் படும் இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகை நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. 
 
‘ எங்கள் நிறுவனம்  மூலம் நாங்கள் பல்வேறு படங்களை தயாரித்து வழங்கி உள்ளோம். ஒவ்வொருக் கால கட்டத்திலும்  மக்களின் ரசனைக்கு ஏற்ப ,சிறந்தக் கலைஞர்களைக் கொண்டு தரமான படங்கள் வழங்கி வருவது என்பது எங்களது நிறுவனத்தாரின் கோட்பாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் அஜித் குமார் நடிக்கும் இந்தப் படத்தை தயாரிப்பதில் நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இயக்குனர் சிவா சொன்ன கதையும் , அவருடைய நேர்த்தியான திட்டமிடுதலும் இந்தப் படத்தின் வெற்றியை ஊர்ஜிதப்ப படைத்தும் . முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப் படும் இந்த ப்ராம்மணட படைப்புக்கு விரைவில் தலைப்பு அறிவிக்கப் படும் ‘ என்றுக் கூறினார் தயாரிப்பாளர் T .G .தியாகராஜன்.