பிரம்மாண்ட படங்களின் படைப்பாளி ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் “தி பிஎஃப்ஜி” (The BFG)

கனவுலகு கதைகளுக்கு உருவமளித்து அதை திரைப்பட வடிவில் அளிப்பதில் திறமை வாய்ந்தவர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் என்றால் அது மிகையாகாது.

ஈ.டி, ஜுராஸிக் பார்க், அட்வென்சர்ஸ் ஆப் டின் டின் உள்ளிட்ட ஏராளமான வசூல் சாதனை படைத்த பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்கிய ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு “தி பிஎஃப்ஜி” (The BFG).

இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில் இந்த தலைமுறையின் சிறந்த கதாசிரியர்களான ரோல் டால், வால்ட் டிஸ்னி, ஸ்டிவன் ஸ்பீல்பர்க் “தி பிஎஃப்ஜி” (The BFG) படத்திற்காக இணைந்துள்ளனர். தமிழ் நடிகர் நாசர் இப்படத்திற்கு தன் குரலை அளித்துள்ளது மற்றொரு சிறப்பம்சம்.

இப்படத்தின் கதை, அதிசயங்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த அளவில் மிகப்பெரிய மனிதர்கள் வாழும் நாட்டிற்கு இராட்சத மனிதன் ஒரு சின்ன சிறுமியை அழைத்து செல்கிறான்.

இப்படத்தின் நூலை எழுதிய ரோல் டாலின் நூறாவது பிறந்தநாளான ஜூலை15, 2016ம் தேதி இப்படம் உலகமெங்கும் கோலாகலமாக வெளியாகின்றது.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக இப்படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றது.