பிறைநிலவு உங்கள் அனைவர்மீதும் அதிர்ஷ்டத்தை, அமைதியை, வளத்தைப் பொழிகிற வேளை இது. டூபாடூ உங்களை வாழ்த்துகிறது, நம் அனைவருக்கும் பிடித்த இசையின்மூலம் உங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறது!
எல்லாம்வல்ல அல்லாவின் பெயரால், ஈத்-உல்-பித்ர் திருநாளைக் கொண்டாடும்வகையில், இறைவனின் மகிமையைச் சொல்லும் ‘ஒருவனே’ என்ற பாடலை நாங்கள் இன்று வெளியிடுகிறோம். மதன் கார்க்கி எழுத உஜ்ஜயினி இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடல், அல்லாவின் கருணையைப் பாடுகிறது; அல்லாவே தாகமாகவும் அதைத் தணிக்கும் நீராகவும் திகழ்வதைப் பாடுகிறது, அவரே ஆசையாகவும், அதைத் தீர்க்கும் மனநிறைவாகவும் அமைவதைப் பாடுகிறது.
06 ஜூலை 2016 அன்று (நாளை) 92.7 BIG FMன் காலைநேரச் சிறப்புநிகழ்ச்சியில் ‘ஒருவனே’ பாடல் ஒலிபரப்பாகும். அன்றுமாலை 6 மணிமுதல் இப்பாடலை www.doopaadoo.comல் கேட்கலாம், பார்க்கலாம். தமிழில் கவ்வாலி வகைப் பாடல்கள் அபூர்வமாகவே வந்துள்ளன, அந்தவகையில் ‘ஒருவனே’ சிறப்பான பங்களிப்பாகத் திகழும்.

இந்தப் பாடலின்மூலம், உலகெங்குமுள்ள முஸ்லீம்களுக்கு டூபாடூ குழு தனது மிக மகிழ்வான ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. இறைவனின் ஒளி உங்களது அனைத்து முயற்சிகளையும் வழிநடத்தட்டும்!