விஜய்யுடன் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா

263

இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை !

கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்காலப் பட்டியலில் இடம் பிடிப்பாள்.

சென்னையில் படிக்கும் அந்த ஆறு வயசு குழந்தையின் கைகளில் பத்து விரல்களை மிஞ்சிய படங்கள்.

இளைய தளபதி விஜய்யின் 60 மற்றும் சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம், ஜெய்யுடன் ஒரு படம், சித்தார்த் நடிக்கும் படம் என இன்னும் பெயரிடப் படாத சில படங்கள். துருதுருவென ஓடிக் கொண்டிருக்கும் இந்த பாப்பாவின் சேட்டைகளை இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் ரசித்து வரவேற்பது மோனிகா சிவாவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கிறது.

விஜய் 60 படத்தில்யாருக்கு மகளாக நடிக்கிறே என்று கேட்டோம்.. உதட்டின் மீது கை வைத்து “ உஷ் “ சொல்லக் கூடாது என்று பெரிய மனுஷி போல பேச வாயடைத்து போனோம் ..வாழ்க வளர்க மோனிகா.

Previous articleராமகிருஷ்ணன் – சொந்தர்ராஜன் நடிக்கும் ஒரு கனவு போல
Next articleAPPA Movie Review