பொன்னு பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக குஞ்சய்யப்பன், ராஜ் தயாரிக்கும் படம் அந்த குயில் நீதானா…
இந்த படத்தில் சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ஸ்ரேயா ஜோஸ், சாலம் குன்னத், வேணு, சாருலதா, ராக்பியா, பேபி ஸ்ரேயா, தாரகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – கிருஷ்ணபிரசாத் துவாரகா
பாடல்கள் – அஜெய்
ஒளிப்பதிவு – ரஞ்சித்ரவி
கலை – பிரதீப்
நடனம் – ராகுல்
ஸ்டன்ட் – ஜெரீஷ்
எழுதி இருப்பவர் – கனகம் ஸ்டெல்லா
இயக்கம் – ஸ்டேன்லி ஜோஸ்
தயாரிப்பு – குஞ்சய்யப்பன், ராஜ்
படம் பற்றி இயக்குனர் ஸ்டேன்லி ஜோஸ் கூறியதாவது..
தொல் பொருள் ஆராய்ச்சியாளராக சங்கர்பாலா தனது மனைவி அஞ்சலியுடன் கிராமத்திற்கு வருகிறார். அந்த கிராமத்தில் கைடாக உள்ள முத்துவின் மீது காதல் கொள்கிறாள் அஞ்சலி. அஞ்சலியின் தவறான எண்ணம் நிறைவேறியதா? இல்லை முத்துவின் மாமன் மகள் பவளதுடன் திருமணம் நடந்ததா என்பதை கிராமிய மனம் கமழும் படமாக உருவாக்கி இருக்கிறோம் என்றார் இயக்குனர் ஸ்டேன்லி ஜோஸ்.