கலைஞரின் பேரன் அருள்நிதி ஜோடியாக நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா நடிக்கிறார்
அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், கதை திரைக்கதை எழுதி புதிய படமொன்றை இயக்குகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்”திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
வெற்றி நாயகன் அருள்நிதி கதாநாயகனாகவும், தான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். அருள்நிதி கலைஞரின் பேரன் என்பதும், தான்யா நடிகர் ரவிசந்திரனின் பேத்தி என்பதும், மேலும் இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள,வசனம் பொன் பார்த்திபன்
மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.