சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கிய P.வாசு, ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க புதிய படம் ஒன்றை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார்.
கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஓடிய ஆப்தமித்ரா படம் தமிழில் ரஜினிகாந்த் நடித்து சந்திரமுகி என்ற பெயரில் வெளியாகி 890 நாட்கள் ஓடி புதிய உலக சாதனையை ஏற்ப்படுத்தியது. தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் நடித்த ஆப்தரட்க்ஷகா, ரவிசந்திரன் நடித்த திருஷ்யா படங்களும் பெரும் வெற்றிபெற்றது.
சமீபத்தில் சிவராஜ்குமார், ஷக்திவேல் வாசு, வேதிகா நடித்த சிவலிங்கா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, 100 நாட்களை கடந்து ஓடி சமீபத்தில் பெரிய விழா கொண்டாடப்பட்டது.
கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற சிவலிங்கா திரைப்படம் தமிழ் – தெலுங்கு மொழிகளுக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய பொலிவுடன், அதே பெயரில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான மிருதன் உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக “இறுதி சுற்று” புகழ் ரித்திக்கா சிங் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் மிக முக்கிய வேடத்தில் சந்திரமுகிக்கு பிறகு அதே போல் முக்கிய வேடத்தில் மீண்டும் P.வாசுவுடன் இணைகிறார் வடிவேலு. மேலும் மிக முக்கிய வேடத்தில் ஷக்திவேல் வாசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து பெங்களூர், மைசூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.
ஒளிப்பதிவு : PKH தாஸ்
இசை : S.S.தமன்
படத்தொகுப்பு : சுரேஷ் அர்ஸ்
கலை : துரை ராஜ்
தயாரிப்பு நிர்வாகம் : கோட்டா கிரிஷ்
மக்கள் தொடர்பு : நிகில்
நிர்வாக தயாரிப்பு : பழனியப்பன் – விக்ரம்
இனை தயாரிப்பு : J.அப்துல் லத்திப்
தயாரிப்பு: ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் – R.ரவீந்திரன்
எழுத்து – இயக்கம் : P.வாசு