Oru Naal Koothu tamil movie character analysis by jackie sekar

சில திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் வெளியாகி கவனம் பெறாமலே போய் விடுவதுண்டு…  அப்படியான சமீபத்திய திரைப்படம் ஒரு நாள் கூத்து… இறைவி அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனாலும் இந்த திரைப்படம் பெருபாண்மையான மக்களின் கவனம் பெறாமலே போய் விட்டது…

 

ஸ்டார் காஸ்ட் மற்றும் போதிய விளம்பரம் இல்லை என்று எல்லாம் ஆள் ஆளுக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்… என்னை பொருத்தவரை எடுத்த ஸ்கிரிப்ட்டுக்கு உண்மையாக உழைத்த திரைப்படம் இந்த ஒரு நாள் கூத்து  என்று சொல்லுவேன்…

அது மட்டுமல்ல…. படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் மிக அழகாக தங்கள் திறமையை வெளிப்படுத்திய திரைப்படம் இது.. அதனாலே இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை சிலாகித்து 17 நிமிடம் பேசி இருக்கின்றேன்…

 

திருமணம்   என்பது ஒரு நாள் கூத்துதான்… ஆனால் அந்த ஒரு நான் கூத்தை நோக்கி சமுகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு  கதை மாந்தர்கள் என்ன விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். அவர்கள் வேதனை என்ன அவர்கள் பக்க  தர்ம நியாங்களை இந்த திரைப்படம் மிக அழகாய் சித்தரித்துள்ளது,…

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படத்தில் அனைத்து  கதாபாத்திரங்களும் மனதோடு வாழ்ந்தது இந்த திரைப்படத்தில்தான்…

இந்த வீடியோவில் மிக விரிவாய் பேசியுள்ளேன்.. ஒரு நாள் கூத்து படம் பார்க்காதவர்கள் படம் பார்த்து விட்டு இந்த வீடியோவை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

https://youtu.be/h9J9Gf8E6To

 

ஜாக்கிசேகர்

21/06/2016