இறைவி திரைப்படம் பேசியது ஆணியமா? பெண்ணியமா? என்று தெரியாது..? ஆனால் அந்த திரைப்படத்தின் காதாபாத்திரங்கள் முக்கியமாக பெண் காதாபாத்திரங்கள் என் மனதை கவர்ந்தன என்பேன்.
நான்கு காதாபாத்திரங்கள்..
60 70 களில் அம்மாவாக இருந்தவர்கள் கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்தனர்.. அவர்களின் பிரதிபலிப்பாய் வடிவுக்கரசி…
நடுத்தர அதே நேரத்தில் விரும்பிய வாழ்க்கையை ரிஸ்க் எடுத்து முடிவினை எடுத்து இயக்குனரை திருமணம் செய்து… மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திண்டாடும் கமலினி முகர்ஜி.
காதலித்த கணவன் கோழை இறந்து விட்டான்… உடல் சுகத்துக்காக ஒருவனை வாழ்ந்து கெட்டவளான தன்னால் ஏமாற்ற முடியாது என்பதோடு செக்சுக்குதான் இங்கே எல்லாம் என்ற முடிவோடு வாழும் பூஜா தேவரியா…
தலயும் தளபதியும் கலந்து செய்த கணவனாக புருசன் வருவான் என்று நினைத்து இருக்கும் போது மைக்கேல் போன்றவர்கள்தான் வாழ்க்கை துணையாக கிடைப்பார்கள் என்ற நிதர்சனம் புரிந்தாலும் மேட்டர் முடிந்த அடுத்த கணமே… இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று குண்டு போடும் கணவனுக்கு கடைசி வரை உண்மையாகவும் காதலுடன் இருப்பவள் அஞ்சலி…
இந்த நான்கு கதாபாத்திரங்கள் பற்றியும் மிக விரிவாக பேசி இருக்கின்றேன்..எச்சரிக்கை படம் பார்க்காதவர்கள் இந்த பதிவையும் இந்த வீடியோவையும் பார்க்க வேண்டாம்.. ஆனால் படம் பார்த்தவர்கள்இந்த வீடியோவையும் இந்த பதிவையும் பிடித்து இருந்தால் ஷேர் செய்யவும்.
https://youtu.be/zq74VXzlWnQ
ஜாக்கிசேகர்.
20/06/2016