சென்னை 28 – II படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர்

ஒரே படத்தில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்க கூடிய திறமையுள்ள இயக்குனர்கள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு. தன்னுடைய படங்களில் நட்புக்கு என்றும் முக்கியத்துவம் தரும் வெங்கட் பிரபு, நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது இயக்கி வரும் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சிக்காக, தனது ஐந்து நண்பர்களை களம் இறக்கி உள்ளதே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களாகிய  ‘நளனும்  நந்தினியும்’ புகழ் வெங்கடேஷ் ராமகிருஷ்ணா, ‘வடக்கறி’ புகழ் சரவணா ராஜன், ‘கனிமொழி’ புகழ் ஸ்ரீபதி, ‘நவீன சரஸ்வதி சபதம்’ புகழ் சந்துரு ஆகிய நால்வரோடு ‘காவல்’ படத்தின் இயக்குனரும், வெங்கட் பிரபுவின் நண்பருமான  நாகேந்திரன் சிறப்பு காட்சியில் நடிப்பது குறிப்பிடித்தக்கது.

சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே இளைஞர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் அதீத வரவேற்பை பெற்று வரும் இந்த நிலையில், நட்புக்கு அடையாளமாக வெங்கட் பிரபுவோடு இந்த ஐந்து இயக்குனர்கள் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை  வானளவுஉயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும், இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர். நட்புக்கு அடையாள சின்னமாக விளங்கும் இந்த சென்னை 28 – II திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா. அது மட்டுமின்றி இந்த அனல் பறக்கும் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை சென்னை 28 – II படக்குழுவினர் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleIT STARS- WoW CELEBRTION வழங்கும் IT மற்றும் பெருநிறுவனங்களுக்கான ஒரு மெகா திறன் தேடல் போட்டி
Next articleDance of Durga Book Launch Event Stills