‘அட்ரா மச்சான் விசிலு’ – ஜூலை-1ல் ரிலீஸ்..!

315

தமிழ் சினிமாவில் கொஞ்ச நாளைக்கு பேய் சீசனுக்கு ஒய்வு கொடுத்துவிட்டது போல, காமெடி படங்களின் ஆதிக்கம் இப்போது துவங்கியுள்ளது என்றே தோன்றுகிறது.. சமீபத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் இந்த சீசனை வெற்றிகரமாக துவக்கி வைத்துள்ளது..

ஆகவே இந்த சீசனில் தங்களது ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வெளியாவதுதான் சரியாக இருக்கும் என இந்தப்படத்தை தயாரித்துள்ள அரசு பிலிம்ஸ் முடிவெடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.. அதனாலேயே வரும் ஜூலை-1ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

நிச்சயம் காமெடிப்பிரியர்களுக்கு சரியான தீனி போட காத்திருக்கிறார்கள் படத்தின் கதாநாயகன் சிவாவும், மெகா வில்லனாக நடிக்கும் பவர்ஸ்டார் சீனிவாசனும்.  இருவருக்கும் தனித்தனி ரசிகர் வட்டம் உண்டு என்பதுடன், இருவரும் கூட்டணி சேர்ந்து நடித்தால் அதை ரசிப்பதற்கென இன்னொரு ரசிகர் வட்டமும் இருக்கிறதே..

அதற்கேற்றார்போல படத்தின் இயக்குனர் திரைவண்ணனும் காமெடிக்கு முழு உத்தரவாதம் இந்தப்படத்தில் உண்டு என நம்பிக்கை தருகிறார்.. ஜீவா நடித்த ‘கச்சீசேரி ஆரம்பம்’ படத்தை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு சினிமா ஹீரோ.. அவரது வெறித்தனமான ரசிகன்.. ஒருகட்டத்தில் ஹீரோவுக்கும் ரசிகனுக்கும் ஏற்படும் மோதல்.. வெற்றி யாருக்கு என்பதுடன் சின்னதாக ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார்களாம்.. ஆனால் இது யாருடைய மனதையும் புண்படுத்தாதவாறு இருக்கும் என்று சொல்கிறார் இயக்குனர் திரைவண்ணன்.

கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார்.. இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன் உட்பட ஏழு இயக்குனர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Previous articleAdra Machan Visilu Movie Stills
Next articleBogan Movie Stills