புதுமுகங்கள் நடிக்கும் “ நட்சத்திர ஜன்னலில்“

ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். மற்றும் போஸ் வெங்கட்,பாய்ஸ் ராஜன்,ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.   கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஜெயமுருகேசன்

படம் பற்றி இயக்குனர் ஜெயமுருகேசனிடம் கேட்டோம்…

ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்கார குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றார்கள். அப்படி பிறக்கிற குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படிகிறார்கள்.

ஒன்றாக படிக்கிற அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அந்த காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? என்பதை ஸ்கூல் பின்னணியில் சொல்லி இருக்கிறோம். படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம். படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் ஜெயமுருகேசன்.

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleEn Appa – Actress Manju Warrier Speaks About Her Father
Next articleNatchathira Jannalil Movie Stills