மக்களின் ரசனைக்கேற்ப வித்தியாசமான வெற்றி படங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10வது தயாரிப்பை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். மிருதன் வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடதக்கது.
விரைவில் துவங்கவிருக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்றது.