உங்கள் ஊரிலேயே சினிமா கற்கலாம் சொல்லித்தர வருகிறார் ஆர்.பாண்டியராஜன்!

சினிமா பற்றிய ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் உங்கள் ஊரிலேயே சினிமா கற்கலாம்  ,முகாமிட்டுச் சொல்லித்தர தயாராகி வருகிறார் ஆர்.பாண்டியராஜன். இது பற்றிய விவரம் வருமாறு:

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Ponniyin Selvan (PS1) Movie Release on Sept 30th Poster

இப்போதும் கூட சினிமா எடுப்பது பற்றி  ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார் 

ஆர்.பாண்டியராஜன்..rpandiarajan.com

ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு கற்பனை, படைப்புத் திறமை இருந்தால் மட்டும் போதாது .கதையைக் காட்சிப்படுத்துவது   எப்படி, இயக்குவது எப்படி என்கிற தொழில் சார்ந்த அடிப்படை அறிவு   தேவை.  சினிமா ஆர்வமுள்ளவர்களுக்குக்  கைகொடுத்து வழிகாட்டும் முயற்சியாக அது வரவேற்கப்படுகிறது 

இயக்குநராக 10 படங்கள் இயக்கியவரும் நடிகராக 100 படங்களுக்கு மேல் நடித்தும் இன்றும் நடித்து வருகிறவருமான ஆர்.பாண்டியராஜனின் இந்த  ஆன் லைன் வகுப்புகள், பயிற்சிப்பட்டறை நடத்துவது முற்றிலும் புதுமையான முயற்சி என பலராலும்  பாராட்டு பெற்று வருகிறது

இதில் கதை உருவாக்கம் முதல் படம் எடுத்து வெளியிடுவது வரை  உள்ள நுணுக்கங்களை  ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து பயன்பெற்று வருகிறார்கள்.இதற்குக் கிடைத்த வரவேற்பால் இம்முயற்சி இன்றும்  தொடர்கிறது.

எல்லாருக்கும் உதவும் வகையிலும் நேரடி அனுபவம் கிடைக்கும் வகையிலும் இப்போது  ஆர்வமுள்ளவர்களின் ஊருக்கே சென்று சினிமா கற்றுக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.

பயிற்சிக்காலம் , இடம்  பற்றிய விவரங்கள். சேரும் மாணவர் ஆர்வம்,வரவேற்பு,எண்ணிக்கையைப் பொறுத்து தமிழ்நாடு முழுக்கவே இப்படிச் சுற்றுப்பயணம் செய்து முகாமிட்டுக் கற்றுத்தரத் தயாராக இருக்கிறார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன். ஏற்கெனவே அமெரிக்காவின் டல்லாஸ்

நகரில் இப்படி வகுப்பு எடுத்திருக்கிறார். அங்கே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதன் தொடர்ச்சியாகவே ஊர்தோறும்  நேரடியாகச் சென்றால் என்ன என்கிற இந்த எண்ணம் இவருக்குத்தோன்றியிருக்கிறது. 

சினிமாவைப் புத்தகங்களை வைத்து மட்டும் கற்றுக் கொள்ள முடியாது .இப்படித் திரையுலகில் அனுபவம் பெற்ற ஒருவர்  நடத்தும் பயிற்சிப்பட்டறை பாடங்கள் மூலம் சினிமா பற்றிய செய்முறைநுணுக்கங்களை நேரடியாக சிறப்பாக அறியலாம்.இந்த புதுமையான நேரடி வகுப்பில் சேர  ஆர்வம் மட்டுமே தகுதியாகப் பார்க்கப்படும்.

அந்த வகையில் சினிமா ஆர்வமுள்ளவர்கள்   rpandiarajan.com  என்கிற தளத்தில் சென்று பயிற்சி பற்றிய முழு விவரம், விண்ணப்பம் ஆகியவற்றைப் பெறலாம்.

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Previous articleKasethan Kadavulada Press Meet Stills
Next articleKabali Audio Launch Stills