ஹரிகுமாரை காப்பாற்றிய புதுமுக நடிகர் சுதர்சன் ராஜ்

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி, மதுரைசம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், திருத்தும் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறு விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டாவது நாயகனாக சுதர்சன் ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, லொள்ளுசபா மனோகர், பிளாக்பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி பாபு, ஷாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஹரிகுமாரை கொல்வதற்காக எதிரிகள் தாக்கும்போது அதை பார்த்த ஹரிகுமாரிடம் வேலை செய்யும் சுதர்சன் ராஜ் எதிரிகளோடு போராடுவார். தனது உயிரை பணையம் வைத்து தனது முதலாளி ஹரிகுமாரின் உயிரை காப்பாற்றுகிறார். ஹரிகுமார் அவரை நம்பிக்கைக்குரிய நண்பனாக்கி கொள்கிறார். அவர் காட்டும் அந்த அன்பிற்கு சுதர்சன் ராஜ் கடைசிவரை நன்பிக்கைகுரியவராக இருக்கிறார். தனது முதல் படத்தில் நடித்துள்ள சுதர்சன் ராஜ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாயகன் ஹரிகுமாருடன் நடித்துள்ளார். இருவரும் வரும் காட்சிகள் மிக அருமையாக வந்திருக்கிறது. ஹரிகுமாருடன் மட்டுமல்ல இரண்டாவது நாயகியுடன் காதல் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்றார் இயக்குனர்.

Previous articleஎங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா
Next articleKathal Agathi Movie Stills