விஜய் மில்டனின் அடுத்த மைல் கல்லாக உருவெடுத்துள்ள திரைப்படம் ‘கடுகு’

கலை என்னும் வார்த்தைக்கு புத்துயிர் கொடுத்து, தமிழ் சினிமாவை ஒரு படி மேலே  எடுத்து சென்றவர் ஒளிப்பதிவாளர் – இயக்குனர் – தயாரிப்பாளர் விஜய் மில்டன். தன்னுடைய  எதார்த்தமான ஒளிப்பதிவால் மக்கள்  மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜய் மில்டன், தனது திறமைகளை ஒளிப்பதிவோடு நிறுத்திவிடாமல்  இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும்  காலூன்றி வெற்றிநடை போட்டு வருவது பாராட்டுக்குரியது. ஏற்கனவே  பரத் சீனியின்  தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷனில்’ வெளியான  ‘கோலி சோடா’  திரைப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுண்டி இழுத்துள்ள நிலையில்,  இவர்கள் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘கடுகு’ திரைப்படம், சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பெரும் அளவில் தூண்டியிருக்கிறது.

பரத், இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் விஜய் மில்டனின் சகோதரரும், தயாரிப்பாளருமான  பாரத் சீனி  ஆகியோர் படத்தின்  முக்கிய கதாப்பாத்திரங்களில் கூட்டணி அமைத்து  நடிப்பது, அனைவரின் எதிர்பார்ப்புகளையும்  அதிகரித்து  கொண்டே போகிறது. இது போன்ற ஒரு வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து, தனித்துவமான கதாப்பாதிரங்களை உருவாக்கி இயக்குவது விஜய் மில்டனின் தனித்துவத்தை உணர்த்துகிறது. ” ஒரு   கலைஞனுக்கு தோன்றும் அல்லது உதயமாகும்  சிந்தனையை  முதலில்  ஒரு ரஃப் நோட்  தான் பதிவு செய்கிறது அந்த வகையில் ரஃப் நோட் என்பது இன்றிமையாதது. அதனால் தான் சொந்த நிறுவனம் துவங்க வேண்டும் என்று எண்ணிய  போது  இந்தப் பெயரை தேர்ந்து எடுத்தேன்..கண் இமைக்கும் நேரத்தில் வளர்ந்து கொண்டே  போகும் இந்த மாடர்ன் உலகில், மக்களின் ரசனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் எங்களின்  இந்த ‘கடுகு’ திரைப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்கிறார் ரஃப் நோட் புரொடக்ஷனின்  நிறுவனர் பாரத் சீனி.