இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படம், ரசிகர்கள் இடையேபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அறிவழகனின் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள்அனைத்தும் மிகுந்த பரபரப்பாக தான் இருக்கும். அதுவும் இது ஒரு அதிரடி படம் என்பதால், சண்டை காட்சிகளுக்குஎந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாக சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் ‘மோஷன்போஸ்டர்’. தற்போது ‘குற்றம் 23’ , அருண் விஜயின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ்படப்பிடிப்பிலும் கலைக்கட்டி வருகிறது. ‘சாட்டை’ படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் ‘ரேடான் தி சினிமா பீபள்’நிறுவனத்தோடு இணைந்து ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண்தயாரித்து வருகிறார்.
முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜயின் ‘குற்றம் 23’ படத்தின் இறுதிகட்ட கிளைமாக்ஸ்காட்சிகள், சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. “காரில் துரத்தி கொண்டுபோகும் ஒரு சண்டை காட்சி எங்கள் படத்தில் இருக்கிறது. அந்த காட்சியை நாங்கள் தற்போது சென்னையில்நள்ளிரவு ஆரம்பித்து விடியற்காலை வரை படமாக்கி வருகிறோம். அதனை தொடர்ந்து எங்கள் படத்தின்கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு படூர் பகுதிகளில் நடைப்பெற இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு பிரமாண்ட அரங்கத்தை ‘குற்றம் 23’ படத்திற்காக எங்களது இயக்குனர் எழுப்பி உள்ளார் ” என்றுகூறினார் இயக்குனர் அறிவழகன். படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாக வில்லன் வம்சி, அருண்விஜயுடன் கைக்கோர்த்து உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான ‘தடையற தாக்க’ படம்அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த கூட்டணி ‘குற்றம் 23’ படத்தில் ஒன்றுசேர்ந்துள்ளது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அருண்விஜயின் நடிப்பில் வெளிவரும் இந்த படம் கண்டிப்பாக அவரை தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படி மேலே எடுத்துசெல்லும் என்பதை உறுதியாக சொல்லலாம்.