Idhu Namma Aalu movie review by jackie sekar

 

 

 

இது நம்ம ஆளு படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு  மிக முக்கியமான காரணம் லவ் பிரேக் அப் ஆன ரெண்டு பேர் மீண்டும்  சேர்ந்து  நடிக்கின்றார்கள்  என்பதே…அப்படி நடிப்பதும் சேர்வதும் இங்கே புதுமையான விஷயம்…

காரணம்  உன்னை எனக்கு புடிக்கவில்லை  உன்னோடு  சேர்ந்து  வாழ்வதும் புள்ளை குட்டி பெற்று,  மிச்ச வாழ்க்கையை வாழ்வதும் குப்பை கொட்டுவதும் சாத்தியமில்லை என்று காதலித்தவள் பிரிந்தால்…. அவளை அப்படியே விட்டு விட்டு விலகி  ஒரு கெத்தான வாழ்க்கையை வாழ்வது  இங்கு இருக்கும் ஆண்களில் 50 விழுக்காடு பேருக்கு சாத்தியமே  இல்லை…

காதலித்த போது எடுத்த படங்களை நெட்டில் ஏற்றுவதும், அவளை பற்றி அவதூறு பரப்புவது என்று சகலமும் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் மகளிர் மட்டும் நாசர் வேலைக்கார ரோகிணி  கேரக்டரிடம் கெஞ்சுவது போல பாப்பம்மா பாப்பம்மா என்னை வச்சிக்கோ பாப்பம்மா என்று  கெஞ்சுதாக இருக்கும்.

பிரிந்த கணவன் மனைவி மீண்டும்  சந்தித்தாலும் நட்பாய் ஹலோ சொல்லி பிரிவது இங்கே சாத்தியமாகும் போது இந்த எதிர்பார்ப்பும் குறையும் என்பது என் எண்ணம்…

நீண்ட நாட்கள்  தயாரிப்பில் இருந்த திரைப்படம். அதிலும் வெளியாகும் போது நிறைய  ரிலிஸ் தேதிகளை பார்த்த திரைப்படம்..

======

இது நம்மாளு திரைப்படத்தின் கதை என்ன?

சிம்புவுக்கு நயன்தாராவை பெண் பார்க்கின்றார்கள்… ஆனால் சிம்புவுக்கு ஆண்ட்ரியாவோடு இருந்த காதல் பிரேக் அப் ஆகி விட்டது.. சிம்பு நயனை திருமணம் செய்தாரா? அல்லது   ஆண்ட்ரியாவா என்பதுதான்  இது நம்ம ஆளு திரைப்படத்தின் கதை.

=====

படத்தின் சுவாரஸ்யங்கள்.

சிம்பு சான்சே இல்லை.. ரசிக்க வைக்கின்றார்.. விண்ணைதான்டி வருவாயா திரைப்படத்துக்கு பிறகு இந்த படத்தில் பின்னி இருக்கின்றார்…  சைலன்டாக இவரும் சூரியும் அடிக்கும் பஞ்சுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்..

சமகால வாழ்வியலை   சிம்புவும் சூரியும்..இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் போது வாரிக்கொள்கின்றார்கள்..

நயன் பின்னி இருக்கின்றார்.. போகின்ற போக்கை பார்த்தால் இன்னும் ஐந்து வருடத்துக்கு நயனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை… செம டார்க் கலர் சாரிகளில் அசத்துகின்றார்… குறிப்பாக நான்  காத்தாட வந்த  பொண்ணு  பாடலில்  பின்னுகின்றார்… முக்கியமாக சாரி ஆயிரம் வாட்டி  சொல்லு என்று சொல்லும் காட்சியிலும் கடைசியில் விடிய விடிய காதல் கடலை போடும் இடத்திலும் சிம்புவும் நயனும்  ஸ்கோர் செய்கின்றார்கள்.

ஆண்ட்ரியா அசத்துகின்றார்… காதல் பிரேக் அப் ஆகும் போது   ஆம்பளை பசங்க காதலை புதைக்க… அப்பா செண்டிமென்ட் இல்லை என்று  அழுது உருகி பிரியும்  அந்த இடம் அருமை…

சூரி படம் முழக்க அதகளம் செய்கின்றார்.

ஐடி கம்பெணி பற்றி டைட்டில் கார்டில் காட்டும் காட்சிகள் அருமை முக்கியமாக தினமும் ஒருத்தன் பொறந்தநாளுவரும் கேக் வெட்டுவானுங்க பட் எவனும் தின்ன  மாட்டானுங்க என்று  சொல்லும் காட்சிகள் டிடெயிலிங்..

படம் ரொம்ப மெச்சூர்டா இருக்கு…. காதல் கசிந்துருக்கும் போது சம்பந்திகள் தண்ணி அடித்து விட்டு சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் ரசிக்கும் படி இல்லை… இன்னும் வலுவான காரணத்தை தேடி இருக்கலாம்.

போன் பேசும் போது அவர்கள் படங்கள் சைடில் தோன்றுவது பொம்மை ரியாக்ஷன்களை சைடில் ஓட விட்டு இருப்பது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கின்றது.

 

குரளரசன் இசையில் இரண்டு பாடல்கள் தேறும் ரகம்.

பாலசுப்ரமணியம் கேமரா அழகாகவே காட்டி தொலைப்பேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளது  முக்கியமாக நகரத்தின் லேண்ட் மார்க் மற்றும்  ஏரியல் வீயூ காட்சிகள் அசத்துகின்றன.

====

படக்குழுவினர் விபரம்

 

Directed by Pandiraj
Produced by T. Rajendar
Usha Rajendar
Written by Pandiraj
Starring Silambarasan
Nayantara
Andrea Jeremiah
Music by Kuralarasan
Cinematography Balasubramaniam
Edited by Praveen K. L.
Pradeep E Ragav
Production
company
Chimbu Cine Arts
Pasanga Productions
Distributed by Sri Thenandal Films
Release dates
27 May 2016[1]
Country India
Language Tamil

 

 

=====

பைனல்கிக்.

காதலர்களுக்கும் காதலித்தவர்களுக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் இயல்பான காதலை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை பல   காட்சிகள் தருகின்றன….உங்க ரெண்டு பேரையும்  வச்சி இந்த படத்தை முடிக்கறதுக்குள்ள என்று பாண்டிராஜ் படம் முடியும் போது ஓவர்லாப்பில் பேசினாலும் அதில் வலியுடன் கூடிய  உண்மை இல்லாமல் இல்லை.

========

படத்துக்கான ரேட்டிங்

ஐந்துக்கு மூன்றேகால்.

3.25/5

=========

 

வீடியோ விமர்சனம்.

 

https://youtu.be/fgPZGA5CDeI

 

 

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

 

 

 

Previous articleIraivi Promotions Auto Flag off Event Stills
Next articlehappy birthday maniratnam sir